

சென்னை,
கொரோனா பெருந்தொற்று காலம் மனித உயிர்களை மட்டுமின்றி, கணவன்-மனைவி இடையேயான திருமண பந்த அமைப்பையும் வேரோடு அழித்துவிட்டதாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 முதல் 2022 வரை கொரோனா காலகட்டத்தில் திருமணம் செய்து கொண்டவர்களின் குடும்ப வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் திருமணம் செய்துகொண்டு, வெறும் 6 முதல் 9 மாதங்கள் மட்டுமே இணைந்து வாழ்ந்துவிட்டு பிரிந்தார்கள்.
லாக்டவுன் காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்தபோது, மக்களின் நல்ல மற்றும் மோசமான குணங்கள் தங்களுக்குள் வெளிப்பட்டுள்ளன. இதுவே தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. மனித உயிர்களை பறித்தது மட்டுமின்றி, பலரின் திருமண வாழ்வையும் இந்த கொரோனா காலம் சிதைத்துள்ளது.