பிரான்ஸ் நாட்டில் இருந்து ராமேசுவரத்துக்கு சுற்றுலா வந்த நபருக்கு கொரோனா பாதிப்பு

பிரான்ஸ் நாட்டில் இருந்து ராமேசுவரத்துக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து ராமேசுவரத்துக்கு சுற்றுலா வந்த நபருக்கு கொரோனா பாதிப்பு
Published on

ராமநாதபுரம்,

ராமேசுவரத்திற்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சுற்றுலா வந்தனர். இவர்கள் காரில் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேசுவரம் வந்தனர். இவர்களில் குடும்பத்தலைவரான 44 வயது நபருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் மண்டபத்தில் கடந்த 9-ந் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில் அந்த குடும்பத்தலைவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது குறித்த தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று காலை அவர்கள் 5 பேரும் காரில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு தொற்றுக்கு உள்ளான அந்த குடும்ப தலைவரை மட்டும் கொரோனா வார்டில் அனுமதித்துவிட்டு மற்றவர்கள் மீண்டும் ராமேசுவரம் புறப்பட்டு சென்றனர். அவரது குடும்பத்தினர் அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com