இளம்பெண் உள்பட 2 பேருக்கு கொரோனா

குமரியில் இளம்பெண் உள்பட 2 பேருக்கு கொரோனா
இளம்பெண் உள்பட 2 பேருக்கு கொரோனா
Published on

நாகாகோவில்,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் சில மாவட்டங்களில் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்தநிலையில் குமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு கடந்த 4 நாட்களாக காய்ச்சல் இருந்தது. பின்னர் அவருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனைதொடர்ந்து அவர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த உறவினர்கள், நண்பர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதேபோல தென்தாமரைகுளம் அருகே உள்ள இலந்தயடிவிளை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய வாலிபர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்களையும் அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com