

தஞ்சை,
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு முகாம்கள் அமைத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தஞ்சையில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை வந்த பரிசோதனை முடிவில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 ஆசிரியர்கள், ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று வரை பாதிக்கப்பட்ட 225 பேரில் 120 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.