பிரிட்டனில் இருந்து வந்த 5 பேருக்கு கொரோனா - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

இதுவரை பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் இருந்து வந்த 5 பேருக்கு கொரோனா - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
Published on

சென்னை,

இங்கிலாந்து நாட்டில் உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் இருந்து செல்லும் விமானங்களை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன. இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அண்மையில் இங்கிலாந்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏற்கனவே ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அவரை கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை இங்கிலாந்தில் இருந்து வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது உருமாற்றம் பெற்ற கொரோனாவா? என்பதை கண்டறிவதற்காக, தொற்று உறுதியானவர்களின் மாதிரிகள் பூனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com