தமிழகத்தில் மேலும் 1,624 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் 1,624 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மேலும் 1,624 பேருக்கு கொரோனா
Published on

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1,51,678 மாதிரிகள் பரிசொதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,624 ஆக உள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,630இல் இருந்து 1,624 ஆக குறைந்தது. சென்னையில் ஏற்கனவே 184 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 189 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 17,192 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 1,639 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 26,09,435 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் மேலும் 24 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,550 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 18 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com