

சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் சென்னையில் தான் முதலில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்தே வந்தது, அதன்பிறகு கடந்த சில நாட்களாக கொரோனா சற்று குறைந்து வந்த நிலையில் கடந்த 2 தினங்களாக ஆயிரத்தை தாண்டியே பதிவாகி வருகிறது.
அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,650-ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் ஒரேநாளில் 1,009 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,02,698 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 22 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,454 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் 11,498 பேர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.