சென்னையில் 6 மண்டலங்களில் 1,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,252 ஆக உயர்வடைந்து உள்ளது என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
சென்னையில் 6 மண்டலங்களில் 1,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, ராயபுரம் மண்டலம் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள அண்ணாநகர் மண்டலம் கொரோனா பாதிப்பில், ஆயிரம் எண்ணிக்கையை இன்று கடந்துள்ளது.

இதுபற்றி வெளியாகி உள்ள அறிவிப்பில், சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 2,252 ஆக இன்று உயர்ந்து உள்ளது. இதனை தொடர்ந்து கோடம்பாக்கம் 1,559, திரு.வி.க.நகர் 1,325, தேனாம்பேட்டை 1,317 மற்றும் தண்டையார்பேட்டை 1,262 ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இதேபோன்று சென்னையில் அண்ணாநகர் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,046 ஆக இன்று உயர்வடைந்துள்ளது. இதனால், சென்னையில் கொரோனா பாதித்த மண்டலங்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com