சேலம் மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா

சேலம் மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது.
சேலம் மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா
Published on

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 24 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று புதிதாக 23 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் 15 பேர், பனமரத்துப்பட்டியில் 2 பேர், தலைவாசல், சங்ககிரி, வீரபாண்டி, காடையாம்பட்டியில் தலா ஒருவரும், திருப்பத்தூரில் இருந்து சேலம் வந்த 2 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com