தமிழகத்தில் 512 பேருக்கு கொரோனா: சேலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு

தமிழகத்தில் நேற்று 512 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார்.
தமிழகத்தில் 512 பேருக்கு கொரோனா: சேலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு
Published on

சென்னை,

நேற்று புதிதாக 20 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 300 பேர், பெண்கள் 212 பேர் என 512 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 77 பேர், கோவையில் 67 பேர் உள்பட 37 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

பெரம்பலூரில் பாதிப்பு இல்லை

இதில் 20 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானோர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் பாதிப்பு இல்லை. நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 52 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 70 பேரும் அடங்குவர்.

தொற்று பாதிப்புக்கு ஆளான 512 பேரில் 383 பேர் ஆஸ்பத்திரி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய நிலவரப்படிதமிழகத்தில் 5 ஆயிரத்து 204 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 241 பேரும், கோவையில் 516 பேரும், செங்கல்பட்டில் 275 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

சேலத்தில் ஒருவர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்றால் நேற்று சேலம் மாவட்டத்தை சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்தார். மற்ற மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. 575 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com