திருப்பத்தூரில் ஒருவருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் நேற்று 192 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
திருப்பத்தூரில் ஒருவருக்கு கொரோனா
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் நேற்று 192 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், திருப்பத்தூரில் மட்டும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு 6 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 22 ஆக உள்ளது. இதேபோல, நேற்று தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com