காரைக்கால் மாவட்டத்தில் ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்று

காரைக்கால் மாவட்டத்தில் ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்று
Published on

 காரைக்கால்,

நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 100-க்கும் கீழ் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது 3 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. கடந்த மூன்று நாட்களில் 20க்கு மேற்பட்டவருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com