திருவாரூர் மாவட்டத்தில் 19 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி - மாவட்ட கல்வி அதிகாரிகள் தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் 19 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 19 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி - மாவட்ட கல்வி அதிகாரிகள் தகவல்
Published on

திருவாரூர்,

தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட்டு வருகின்றன. பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடந்து வரும் நிலையில், மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் வரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், திருவாரூர் மாவட்டத்தில் 19 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பள்ளிகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அடியக்கமங்கலம், அரித்துவாரமங்கலம், தலைக்காடு உள்ளிட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் அதிகபட்ச எண்ணிக்கையில் எடமேலையூர் அரசு பள்ளியில் 13, தலைக்காடு 1, அடியக்கமங்கலம் 1, அரித்துவாரமங்கலம் 2, முனால்கோட்டை 2 என மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்கள் அனைவரும் மருத்துவத்துறை அலுவலர்களின் அறிவரையின்படி தனிமைப்படுத்தபட்டுள்ளனர். அவர்களோடு உடனிருந்த மாணவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கல்வித்துறை சார்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com