தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்தது

தமிழகத்தில் இன்று புதிதாக 33,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்தது
Published on

சென்னை,

தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் கொரோனா தொற்றால் உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அந்தவகையில் ஒரே நாளில் 33,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 33,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,64,350 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இன்று 364 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,369 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 21,362 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,03,052 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 2,42,29 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 6,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com