தமிழகத்தில் இன்று 33 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே தொற்று பாதிப்பு வேகமாக சரிந்து வருவது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,52,714 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 61 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,14,323 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து 11-வது நாளாக கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது வரை 366 பேர் கொரோனா தொற்றிற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com