

சென்னை,
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் 1,57,587 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒரு நாள் பாதிப்பு 1,896 ஆக உள்ளது.
ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,916இல் இருந்து 1,896 ஆக குறைந்தது. சென்னையில் மேலும் 216 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் ஏற்கனவே 219 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 216 ஆக கு குறைந்துள்ளது.
கொரோனாவால் மேலும் 23 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,519 ஆக உயர்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் 19 பேரும் தனியார் மருத்துவானைகளில் 4 பேரும் உயிரிழந்தனர். ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 34 ஆக இருந்த நிலையில் தற்போது 23 ஆக குறைந்தது.
கொரோனாவில் இருந்து மேலும் 1,842 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,33,804 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 20,458 ஆக உள்ளது.
சேலம் மாவட்டத்தில் 130 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 127 ஆக குறைந்துள்ளது. ஈரோட்டில் 185 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 179 ஆக குறைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 112 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 106 ஆக குறைந்துள்ளது. கோவையில் 223 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 225 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.