அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று ;அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு கொரோனா பரிசோதனை

அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருடன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று ;அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு கொரோனா பரிசோதனை
Published on

சென்னை

தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருடன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தங்கமணி பங்கேற்றார். தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால், வைப்பீட்டாளர்கள் நலனிற்காக அதன் செயல்பாடுகளை ஆன்லைன் மூலமாக செயல்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள http://tnpowerfinance.com என்ற புதிய வலைதளம், TNPFCL என்ற கைப்பேசி செயலியை முதலமைச்சர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com