சென்னை தெற்கு ரெயில்வே தலைமை அலுவலக மூத்த அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தெற்கு ரெயில்வேயில் தலைமை அலுவலகத்தில் பணி புரியும் 2 மூத்த அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு ஆனது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை தெற்கு ரெயில்வே தலைமை அலுவலக மூத்த அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனினும், சரக்கு ரெயில்கள் செல்ல அனுமதி உள்ளது. தமிழக ரெயில்வே போலீசார் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது.

இதேபோன்று, சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பணிபுரிந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் 15 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சென்னை தெற்கு ரெயில்வேயில் தலைமை அலுவலகத்தில் பணி புரியும் 2 மூத்த அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com