வேகமெடுக்கும் கொரோனா.. இந்தியாவில் 1,000 பேர் தொற்றால் பாதிப்பு!

மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
தெற்காசியாவில் கொரனோ தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் அதன் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, மே 26 காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் 1,009 பேருக்கு கொரனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளத்தில் 430 பேருக்கும் தமிழ்நாட்டில் 69 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மீண்டும் பரவி வரும் கொரனோ பாதிப்பு காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், இது வீரியம் குறைந்த கொரோனா பரவல் என்றும், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story






