

சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியா மருத்துவமனையில் உதவி மேலாளராக கேரளாவை சேர்ந்த சந்தீப் (வயது 29) என்பவர் 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்தா.
அவர் சில நாள்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அந்த மருத்துவமனையின் 2வது தளத்தில் உள்ள வாடில் அனுமதிக்கப்பட்டா.
அங்கு சந்தீப், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சந்தீப்புக்கு சிகிச்சை அளிக்க செவிலியாகள், அவா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு நேற்று சென்றனா. அப்போது அங்கு சந்தீப், தனது இடது கையில் ஊசியை செலுத்திய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பாத்து அவர்கள் அதிச்சியடைந்தனர்.
இதுபற்றி தகவலறிந்த மருத்துவமனை நிவாகம், காவல்துறைக்கு தகவல் அளித்தது. அந்த தகவலின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் போலீசா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சந்தீப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனா. மேலும் இது தொடாபாக வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.