கொரோனா தடுப்பு நடவடிக்கை: சுகாதார பணியில் 16 ஆயிரம் பணியாளர்கள் - மாநகராட்சி அதிகாரி தகவல்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுகாதார பணியில் 16 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை: சுகாதார பணியில் 16 ஆயிரம் பணியாளர்கள் - மாநகராட்சி அதிகாரி தகவல்
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சென்னையில் மாநகராட்சி சார்பில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் அனைவரின் வீட்டிலும் விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த கொரோனா தடுப்பு பணிக் காக சென்னை மாநகராட்சியை சேர்ந்த 16 ஆயிரத்து 197 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com