கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் வரும் 15-ம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நிறைவடைய உள்ளன.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், டி.ஜி.பி உள்ளிட்டோருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com