கொரோனா பரவல்: ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவா? - தமிழக அரசு விளக்கம்

கொரோனா பரவல் காரணமாக வருகிற 22-ந்தேதி ஊரடங்கு அறிவிப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று மீண்டும் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது. நேற்று முன்தினம் வரையிலான நிலவரப்படி 222 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு அறிவிப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பலரும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

இது பழைய வீடியோ. 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிப்பதாக வெளியான செய்தியை தற்போது வெளியான செய்தி போல் தவறாக பரப்பி வருகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com