வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் - கலெக்டர் விஷ்ணு அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் 3-வது அலையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்படுகிறது என்று கலெக்டர் விஷ்ணு அறிவித்துள்ளார்.
வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் - கலெக்டர் விஷ்ணு அறிவிப்பு
Published on

நெல்லை,

இது குறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து, தற்போது 1.2 சதவீதமாக உள்ளது. கொரோனா 3-வது அலை வராமல் தடுக்க கிராமப்புற மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் 3-வது அலையைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தனிக்கவனம் செலுத்தப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்ட 10 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் மீண்டும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. இன்று (சனிக்கிழமை) முதல் நெல்லை மாவட்டத்துக்கு வருகிற வெளியூர் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள். கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை மாவட்டத்துக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com