

புதுச்சேரி
புதுவையில் காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 618 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 30 பேருக்கு தெற்று உறுதியானது.
இதனால் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 765 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 87 பேர், வீடுகளில் 367 பேர் என 454 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 43 பேர் குணமடைந்தனர்.
புதுவையில் தொற்று பரவல் 1.15 சதவீதமாகவும், குணமடைவது 98.19 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 322 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 890 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 11 லட்சத்து 528 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.