கொரோனா அச்சுறுத்தல்: முதல் அமைச்சர் தலைமையில் ஆலோசனை

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா பரவாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா அச்சுறுத்தல்: முதல் அமைச்சர் தலைமையில் ஆலோசனை
Published on

சென்னை,

கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவமால் தடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் எனத்தெரிகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com