கொரோனா 3-வது அலையில் 2,111 தமிழக போலீசாருக்கு கொரோனா

நேற்று மட்டும் தமிழக காவல்துறையில் 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா 3-வது அலையில் 2,111 தமிழக போலீசாருக்கு கொரோனா
Published on

சென்னை,

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் 3-வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் முன்கள பணியாளர்களான சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில் கொரோனா தொற்றின் 3-வது அலையில் தமிழக காவல்துறையில் இதுவரை 2,111 காவல்துறையினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மட்டும் தமிழக காவல்துறையில் 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 18 எஸ்.பி.க்கள் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மேலும் டி.ஜி.பி. முதல் ஐ.ஜி. வரையிலான பதவிகளில் உள்ள 6 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com