திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா

திராவிடர் கழக தலைவர் கி வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா
Published on

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி(வயது 88). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி உள்ளிட்ட கொரோனா அறிகுறி ஏற்பட்டது. இதையடுத்து கி.வீரமணி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த பரிசோதனைக்கான முடிவு நேற்று (திங்கட்கிழமை) வந்தது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

கி.விரமணி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com