கொரோனா தடுப்பூசி முகாம்

வாணியம்பாடியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கொரோனா தடுப்பூசி முகாம்
Published on

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவின்படி ஆலங்காயம் மற்றும் வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டி.ஆர்.செந்தில் கொரோனா தடுப்பூசி முகாமை நகராட்சி பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு தடுப்பூசி முக்கியத்துவத்தை பற்றி பொதுமக்களுக்கு கூறினார்.

அப்போது வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதாரப பணியாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் உடன் இருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com