மாவட்டத்தில் 917 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்; கலெக்டர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 917 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் 917 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்; கலெக்டர் தகவல்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் 30-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் என 917 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 140 சிறப்பு முகாம்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் 777 இடங்களிலும் தகுதியான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களில் 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்தி கொள்ளலாம். மேலும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் நிறைவடைந்த 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். தடுப்பூசி மையங்களில் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள், வருவாய்த்துறை, ஊரக மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை, தன்னார்வலர்கள், காவல்துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலதுறை அலுவலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

முகாம்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளிகளுடன் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்துவதற்கு புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் ஒரு அடையாள அட்டை மற்றும் தொலைபேசி எண் கொண்டு வந்து பதிவு செய்து கொரோனா தடுப்பூசி செலுத்தி உயிரிழப்பை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com