"கொரோனா தடுப்பூசி முகாம் இன்றுடன் நிறைவு?" - சுகாதாரத்துறையினர் விளக்கம்

கொரோனா தடுப்பூசி முகாம் இன்றுடன் நிறைவு பெறுவதாக நீலகிரியில் தகவல் பரவியது.
"கொரோனா தடுப்பூசி முகாம் இன்றுடன் நிறைவு?" - சுகாதாரத்துறையினர் விளக்கம்
Published on

நீலகிரி,

கொரோனா தடுப்பூசி முகாம் இன்றுடன் முடிவடைய உள்ளதாக தகவல் பரவிய நிலையில், பந்தலூரில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கொரோனா தடுப்பூசி முகாம் இன்றுடன் முடிவடைய உள்ளதாக அதிகார்ப்பூர்வமற்ற தகவல் பரவியது. மேலும், தடுப்பூசி செலுத்த நாளை முதல் கட்டணம் செலுத்த வேண்டும் என வதந்தி பரவிய நிலையில், நீலகிரி மாவட்டம் பந்தலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்ட பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டனர்.

தேயிலை தோட்டங்களுக்கு நேரடியாக சென்ற சுகாதாரத்துறையினர், கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com