

சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை விரிவுப்படுத்தி, மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
இதன்படி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில், மாற்றுத்திறனாளிகளுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி போடும் முகாமை முதல்-அமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.