ஒரே நாளில் 13,066 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஒரே நாளில் 13,066 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 13,066 பேருக்கு கொரோனா தடுப்பூசி
Published on

தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி, பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 37-வது சிறப்பு முகாம்கள் நேற்று நடந்தது. முகாம்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 2,521 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 10,545 பேருக்கும் என ஒரே நாளில் மொத்தம் 13,066 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com