தமிழகத்தில் இதுவரை 25 ஆயிரத்து 908 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் இதுவரை 25 ஆயிரத்து 908 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் நேற்று 172 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. அந்த வகையில் 17 ஆயிரத்து 200 பேருக்கு செலுத்த தடுப்பு மருந்து தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று 9 ஆயிரத்து 305 சுகாதாரப் பணியாளர்கள் கோவிஷீல்டு தடுப்பு மருந்தும், 141 பேர் கோவேக்சின் என மொத்தம் 9 ஆயிரத்து 446 பேர் தடுப்பு மருந்தும் செலுத்திக்கொண்டனர். இது 54.92 சதவீதம் ஆகும்.

தமிழகத்தில் இதுவரை 25 ஆயிரத்து 280 பேர் கோவிஷீல்டு தடுப்பு மருந்தும், 628 பேர் கோவேக்சின் தடுப்பு மருந்தும் என மொத்தம் 25 ஆயிரத்து 908 சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பு மருந்து செலுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com