கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அலட்சியம் கூடாது; போலீசாருக்கு கமிஷனர் அறிவுரை

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில் அலட்சியம் கூடாது என தமிழக போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அலட்சியம் கூடாது; போலீசாருக்கு கமிஷனர் அறிவுரை
Published on

சென்னை,

தமிழக போலீசாருக்கு, கமிஷனர் சங்கர் ஜிவால் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கொரோனாவுக்கு எதிராக பெரும் சவாலுடன் பணியாற்றி வரும் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு தொற்று பரவாமல் இருக்க, ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டோருக்கு, கொரோனா பாதிப்பு மிக குறைவாகவும், உயிருக்கு பாதிப்பு ஏற்படுவதும் இல்லை என தெரிய வந்தது. கர்ப்பிணியரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என டாக்டர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து கருத்து தெரிவித்துள்ளனர்.

முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத போலீசார் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். இது உங்களையும், குடும்பத்தினரையும் காப்பாற்றும். தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாக நீங்களாவே காரணம் தெரிவித்து காலம் தாழ்த்த வேண்டாம்.

கோவிஷீல்டு இரண்டாம் தவணை தடுப்பூசி கிடைக்காத பட்சத்தில், தனியார் மருத்துவமனைகளில் இருந்து பணம் கொடுத்து வாங்க உள்ளோம். இந்த வாய்ப்பை போலீசார் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com