3வது மெகா முகாமில் 24.85 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் 3வது மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்ற 24.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
3வது மெகா முகாமில் 24.85 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த இரு தடுப்பூசி முகாம்களிலும் இலக்கைவிட கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. அதேபோன்று இன்று தமிழகம் முழுவதும் 3-ஆவது மெகா சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

இதில் 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு போடுவதற்கு இலக்கு நிணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 60 சதவீதத்தினா முதல் தவணை தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனா என்ற நிலை ஏற்படும் என நிணயிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பிற்பகல் 2.15 மணி நிலவரப்படி 15.04 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட தடுப்பூசி இலக்கான 15 லட்சம் 2.15 மணிக்கே எட்டப்பட்டது. 15 லட்சம் பேருக்கு செலத்த இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில் இலக்கை விஞ்சி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரவு நிலவரப்படி தமிழகத்தில் 3வது மெகா சிறப்பு முகாமில் பங்கேற்ற 24.85 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என அரசு அறிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com