கொரோனா பாதிப்பு: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மருத்துவமனையில் அனுமதி

கொரோனா பாதிப்பு காரணமாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சகாயம் அரசியல் பேரவை என்ற அமைப்பு தொடங்கி, இன்று வாக்குப்பதிவு நடந்துமுடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டார். சகாயம் அரசியல் பேரவையின் வேட்பாளர்களுக்காக அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து அவர் சென்னையிலுள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com