

சென்னை,
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 167 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோன்று பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து, பிரதமர் தலைமையில் நாளை முதல் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பிற அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும், முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.