தமிழகத்தில் இன்று 5,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் இன்று 5,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
Published on

சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று மேலும் 5,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,51,370 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 67 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,187 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,80,751 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தொடர்ந்து அதிகபட்சமாக கோவையில் 392 பேர், சேலத்தில் 339 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரத்தில் 160 பேர், திருவள்ளூர் 199 பேர், செங்கல்பட்டு 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று 5,222 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,97,033 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 44,150 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 91,191 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 82 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com