தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு
Published on

சென்னை,

கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,173 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,204 ஆக உயர்ந்துள்ளது.

பீலா ராஜேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்தவர்கள் எண்ணிக்கை 68519- ஆகும். அரசு கண்காணிப்பில் 135 பேர் உள்ளனர்.

வீட்டுக்கண்காணிப்பில் 28,711 பேர் உள்ளனர். இதுவரை 19,255 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர். 81 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com