

ஓசூர்:
ஓசூர் ராஜகணபதி நகர் முத்துமாரியம்மன் கோவில் பின்புறம் பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று வீட்டை திறந்து பார்த்தபோது, உள்ளே 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் இருந்தது. பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். தொடர்ந்து பிணமாக கிடந்த அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?, கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.