தீக்காயங்களுடன் ஆண் பிணம்

பேரிகை அருகே தீக்காயங்களுடன் பிணமாக கிடந்த நபர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீக்காயங்களுடன் ஆண் பிணம்
Published on

ஓசூர்

பேரிகை அருகே தீக்காயங்களுடன் பிணமாக கிடந்த நபர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீக்காயங்களுடன் ஆண் பிணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே சொன்னேபுரம் கிராமத்தில் உடலில் தீக்காயங்களுடன் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் பேரிகை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருக்க தீவைத்து எரித்து உடலை வீசி சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தீக்காயங்களுடன் ஆண் பிணம் கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com