வீடு தேடி வரும் அலுவலர்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யலாம்

வீடு தேடி வரும் அலுவலர்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
வீடு தேடி வரும் அலுவலர்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யலாம்
Published on

சென்னை,

1.1.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக்கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, வாக்காளர்களை சரிபார்க்க அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீட்டுக்கு வீடு சரிபார்ப்பு பணி கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கியது. வருகிற 21-ந் தேதி வரை இந்த பணி நடக்கிறது.

பெயர் சேர்க்கலாம்

இந்த பணியின்போது வாக்குச்சாவடி அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிலும் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களின் விவரங்களையும் சரி பார்ப்பர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புபவர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம், ஆதார் எண் இணைப்பு போன்றவற்றை வீடு தேடி வரும் வாக்குச்சாவடி அலுவலர் மூலம் மேற்கொள்ளலாம்.

1.10.2023 அன்று 18 வயது பூர்த்தியடைபவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com