

சென்னை,
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இன்று கூறும்பொழுது, கருவறை முதல் கல்லறை வரை இந்திய மக்கள் லஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என வேதனை தெரிவித்துள்ளார்.
ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும். ஊழலுக்கு நீதி துறையும் விதிவிலக்கு அல்ல என கூறினார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த காலங்களில் ஓட்டுக்கு பணம் வாங்கி விட்டு அந்த கட்சிகளுக்கு வாக்களிக்கும் நடைமுறை இருந்தது என குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இந்த முறை இதற்கு எதிராக தேர்தல் ஆணையம் கடும் பிரசாரம் செய்து வருகிறது.
இதுபற்றி கூறிய நீதிபதி, ஓட்டுக்கு லஞ்சம் பெறுவது ஜனநாயகத்தின் அடித்தளத்தை ஆட்டம் காண செய்துவிடும் என எச்சரிக்கை செய்துள்ளார்.