தவெக ஆட்சியில் ஊழல் பெரிய அளவில் குறைந்துள்ளது: அன்புமணி பேட்டி

தற்போதைய மின்வெட்டுக்கு தி.மு.க ஆட்சியே காரணம் என்று அன்புமணி கூறினார்.
தவெக ஆட்சியில் ஊழல் பெரிய அளவில் குறைந்துள்ளது: அன்புமணி பேட்டி
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய் உடனான சந்திப்பிற்கு பின் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் விஜய்யை, சுமார் 25 நிமிடங்கள் சந்தித்து பேசினேன். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினேன். 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும். மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் துல்லியமாக இருக்கும்.

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கவர்னர் உரையில் இடம்பெற வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். இல்லாதவர்களுக்கு கொடுப்பது தான் சமூக நீதி. சென்சஸ் உடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என வலியுறுத்தினேன். நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிதாக பதவியேற்றுள்ள தவெகவின் ஆட்சி சிறப்பாக உள்ளது. நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. தவெக ஆட்சியில் ஊழல், லஞ்சம் பெரிய அளவில் குறைந்துள்ளது. ஆட்சியாளர்கள் மாறியுள்ளார்கள்; அதிகாரிகள்தான் தான் இன்னும் மாற வேண்டும்.

தவெக அரசுக்கு இன்னும் ஓன்றிரண்டு மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும். புதிய அரசு அமைந்து அனைத்தையும் ஒரே மாதத்தில் செய்ய வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. தற்போதைய மின்வெட்டுக்கு தி.மு.க ஆட்சியே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com