குடிசை வீட்டில் தீ விபத்து

குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாயின.
குடிசை வீட்டில் தீ விபத்து
Published on

பாணாவரத்தை அடுத்த பிள்ளையார் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (வயது 58), கூலித்தொழிலாளி. இவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு மின் கசிவு காரணமாக திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் சோளிங்கர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடிசை வீட்டில் இருந்த சான்றிதழ்கள், துணிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சோளிங்கர் ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார், துணைத் தலைவர் பூங்கொடி ஆனந்தன், ஒன்றிய செயலாளர் சந்திரன் ஆகியோர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர். தீ விபத்து குறித்து பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com