அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம்
Published on

அந்தியூர்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

பருத்தி ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதற்கு அந்தியூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து விவசாயிகள் 5 ஆயிரத்து 742 மூட்டைகளில் பருத்தியை கொண்டு வந்திருந்தனர். இது (குவிண்டால்) குறைந்தபட்ச விலையாக 10 ஆயிரத்து 751 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 12 ஆயிரத்து 611 ரூபாய்க்கும் என மொத்தம் 2 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன.

நிலக்கடலை (காய்ந்தது) 299 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இது (குவிண்டால்) குறைந்தபட்ச விலையாக 6 ஆயிரத்து 161 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 7 ஆயிரத்து 201 ரூபாய்க்கும் ஏலம் போனது.

நிலக்கடலை

நிலக்கடலை (பச்சை) 4 மூட்டைகள் வந்தன. இது (குவிண்டால்) குறைந்தபட்ச விலையாக 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 3 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் என மொத்தம் 6 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன.

ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், தர்மபுரி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் விவசாய விளைபொருட்களை ஏலம் எடுத்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com