அரூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.5¼ லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அரூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.5¼ லட்சத்துக்கு பருத்தி ஏலம்
Published on

அரூர்:

அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் ஒவ்வொரு வாரமும் பருத்தி ஏலம் நடந்து வருகிறது. இந்த ஏலத்துக்கு அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் நடந்த ஏலத்துக்கு 150 விவசாயிகள் 220 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 700 முதல் ரூ.9 ஆயிரத்து 666 வரை ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 20 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் போனது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com