ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.6,319-க்கு விலை போனது.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
Published on

பாபநாசம்:

பருத்தி ஏலம்

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 157 லாட் பருத்தி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. சராசரியாக 119.80 குவிண்டால் பருத்தியை விவசாயிகள் கொண்டுவந்தனர்.

அதிபட்சமாக குவிண்டால் ரூ.6,319-க்கு விலைபோனது

கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம், தேனி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை ஏலம் எடுத்தனர். ஏலம் எடுக்கப்பட்ட பருத்தியின் மதிப்பு ரூ.6.54 லட்சம் ஆகும். இதில் அதிகபட்சமாக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.6,319-க்கும், குறைந்தபட்சமாக குவிண்டால் ரூ.4,846-க்கும், சராசரியாக குவிண்டால் ரூ.5,699-க்கும் விலை போனது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com