ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்லில் நேற்று 5,500 மூட்டை பருத்தி சுமார் ரூ.1½ கோடிக்கு ஏலம் போனது.
ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்
Published on

பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 5,500 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.

ரூ.1.45 கோடி

இந்த பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 45 லட்சத்துக்கு விற்பனையானது. ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 700 முதல் ரூ.8 ஆயிரத்து 405 வரையிலும், டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8 ஆயிரத்து 9 முதல் ரூ.8 ஆயிரத்து 599 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,999 முதல் ரூ.7 ஆயிரத்து 209 வரையிலும் ஏலம் போனது.

இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர்.

ராசிபுரத்தில் பருத்தி ஏலம்

ராசிபுரம் அருகே உள்ள பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்தில் சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் ஆர்.சி.எச். ரகப் பருத்தி 2,387 மூட்டைகளும், டி.சி.எச். ரகம் 53 மூட்டைகளும், கொட்டு பருத்தி 66 மூட்டைகளும், கொண்டுவரப்பட்டிருந்தன.

ரூ.75 லட்சம்

இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 869-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 511-க்கும், டி.சி.எச். ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 103-க்கும் அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 721-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்து 596 முதல் அதிகப்பட்சமாக ரூ.6 ஆயிரத்து 99-க்கும் ஏலம் விடப்பட்டது.

கடந்த வாரத்தை விட இந்த வாரம் விவசாயிகள் பருத்தி மூட்டைகளை கொண்டு வராததால் பருத்தி வரத்து குறைந்து காணப்பட்டது. இந்த ஏலத்தில் 2,506 பருத்தி மூட்டைகள் ரூ.75 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com